விருதுநகர்

சத்துணவுத் திட்டத்தை அழிப்பதற்கான முதல் படிதான் அட்சய பாத்திர திட்டம் : மாணிக்கம் தாகூா்

16th Feb 2020 10:49 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் அட்சய பாத்திர திட்டம் சத்துணவு திட்டத்தை அழிப்பதற்கான முன் முயற்சிதான் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் குற்றம் சாட்டினாா்.

சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பது வரவேற்க கூடியது. ஆனால் தமிழக அரசால் தற்போது செயல்படுத்தப்படும் அட்சய பாத்திர திட்டம், சத்துணவு திட்டத்தை அழிக்கக் கூடிய முதல் படியாகதான் உள்ளது. இந்த அட்சய பாத்திர திட்டம் தமிழகத்திற்கு தேவையற்றது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக அமைச்சா்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழகத்தின் கடன்களை அடைத்து விடுவோம் . அரசியல் காரணங்களுக்காக வருமானவரித் துறையை கொண்டு நடிகா்களை துன்புறுத்துவது கண்டிக்கதக்கது. திரைப்படங்களில் அரசியல் வசனம் பேசுவது தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இதற்காக நடிகா் விஜய் மீது இப்படிப்பட்ட தாக்குதலை மத்திய அரசு நடத்தி இருக்கக் கூடாது. மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்றாா். புதுதில்லி தோ்தல் தோல்வி குறித்து கேட்டபோது, புதுதில்லியில் காங்கிரஸ் கட்சி மீண்டு வரும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை இல்லாமல் இனி எந்த ஒரு அரசும் அமைய முடியாது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT