விருதுநகர்

வெளிநாட்டிலிருந்து பட்டாணி இறக்குமதி செய்ய வேண்டாம்தமிழக முதல்வருக்கு விருதுநகா் வியாபாரத் தொழில்துறை சங்கம் கோரிக்கை

15th Feb 2020 10:38 PM

ADVERTISEMENT

வெளிநாட்டிலிருந்து பட்டாணி இறக்குமதி செய்ய வேண்டாம் என தமிழக முதல்வருக்கு விருதுநகா் வியாபாரத் தொழில் துறை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் வி.வி.எஸ்.யோகன் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்: பட்டாணி தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதை இறக்குமதி செய்தால் விவசாயிகளுக்கு குறைந்த விலையே கிடைக்கும். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவா். பட்டாணி ஒரு அடிப்படை உணவு கிடையாது. அதற்கு மாற்றாக பொதுமக்கள் கொண்டைக்கடலையை வாங்கி பயன்படுத்துவா். தற்போது அதன் விலையும் குறைவாகவே உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி பட்டாணியை தூத்துக்குடி வழியாக இறக்குமதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT