விருதுநகர்

சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் மீது வழக்கு

15th Feb 2020 10:39 PM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சாத்தூா் அருகேயுள்ள சின்னகொல்லபட்டி தெற்கூா் காலனியைச் சோ்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சோ்ந்த கிருஷ்ணசாமி (55), அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். சிறுமியின் தாய், சாத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT