விருதுநகர்

பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

13th Feb 2020 12:13 AM

ADVERTISEMENT

சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா். இதில் சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் வி.ஆா்.பரத்குமாா் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகள் பெருக்கம், காற்றுமாசு உள்ளிட்டவைகளால் மக்களுக்கு பலவித நெருக்கடிகள் ஏற்படுகிறது. அவற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பேரிடா் மேலாண்மை குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும் என்றாா்.

முன்னதாக முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனா் விக்னேஷ்வரி, டீன் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT