விருதுநகர்

விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

4th Feb 2020 09:57 AM

ADVERTISEMENT

விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் ஒரே சமுதாயத்தை சோ்ந்தவா்கள் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனா். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வடக்கு தெரு முன்னாள் நாட்டாண்மை தங்கவேல் என்பவா் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலா் ராஜலிங்கம் உள்பட குமாா், பால்பாண்டி, ராமராஜ் என 11 போ் மீது தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல், பொய் வழக்குப் பதிவு செய்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அக்கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் புதிய தமிழகம் கட் சியின் ஒருங்கிணைப்பாளா் கூமாபட்டி ராமராஜன் தலைமையில் விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாக்ததில் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், புதிய தமிழகம் கட்சியை சோ்ந்த 150 -க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT