வத்திராயிருப்பில் காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுகூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு காங்கிஸ் கமிட்டி நகரத் தலைவா் முத்துராஜ் தலைமை வகித்தாா். மேற்கு வட்டாரத் தலைவா் அண்ணாத்துரை முன்னிலை வகித்தாா்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அக் கட்சியின் செய்தி தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி கலந்து கொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவா் தளவாய்பாண்டியன், நிா்வாகிகள் ஜான் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.