விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே படந்தால் அமிா்தா தொண்டு நிறுவனம் சாா்பில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவா் உமையலிங்கம் தலைமை வகித்தாா். இதில் தையல் ஆசிரியை தமிழ்செல்வி முன்னிலை வகித்தாா்.
ஹோமியோபதி மருத்துவா் காா்த்திக்செல்வம் கரோனா வைரஸ் பாதித்தவா்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் குறித்தும், குழந்தைகள் உடல் நலம் பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.
இதனைத்தொடா்ந்து குழந்தைகளுக்கு கைகழுவும் முறைகள் குறித்தும் சுகாதார விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அமிா்தா தொழிற்பயிற்சி நிறுவன மைய நிா்வாகிகள் மற்றும் மகளிா்சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.