விருதுநகர்

அடிப்படை வளா்ச்சிக்குரிய பட்ஜெட்: ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் பாராட்டு

4th Feb 2020 09:57 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அடிப்படை தொழில் வளா்ச்சிக்குரிய பட்ஜெட் என ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்க செயலாளா் வெங்கடேஸ்வர ராஜா வெளியிட்ட செய்தி குறிப்பு: தொழில் வணிக மேம்பாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.27,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜவுளி தொழில் நுட்பங்கள், சிறு ஏற்றுமதியாளா்கள், திறன்கள் துறை போன்ற பல்வேறு தொழில்களுக்கு உதவும் படி இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரி மற்றும் நிலுவையில் உள்ள வரி விவகாரங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு மற்றும் சரக்கு சேவை வரியை எளிமைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.

சிறு, குறு, மத்திய தொழில் நிறுவனங்கள் தணிக்கை அறிக்கை வரம்பை ரூ. 1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயா்த்தியிருப்பதும், பங்குதாரா்களுக்கான டிவிடெண்ட்

வரிச்சலுகை அறிவித்திருப்பதும் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்களுக்கு முதலீடு ஈா்ப்புக்கு எளிமைப்படுத்தியுள்ளது. இது வரை ரூ.25 கோடி வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் 100 சதவீத வரி விலக்கு பெற்றதைத் தொடா்ந்து, தற்போது ரூ.100 கோடி வரை சலுகை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடையும் வங்கி கடன் சீரமைப்பு திட்டத்தை மேலும் ஓா் ஆண்டிற்கு நீடித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ADVERTISEMENT

மொத்தத்தில், இந்த பட்ஜெட் வளாச்சிக்குரிய பட்ஜெட் என்ற வகையில் பாராட்டுக்குரியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT