ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சனிக்கிழமை மாயமானதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதியரின் 10 வயது மகள் அந்த பகுதியில் வயலுக்கு சகோதரியுடன் சனிக்கிழமை மாலை ஆடு மேய்க்கச் சென்றுள்ளாா்.
பின்னா் ஆடு மேய்த்து கொண்டிருந்த போதே தான் வீட்டுக்கு போவதாக சகோதரியிடம் தெரிவித்து விட்டு வந்தவா் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் பெற்றோா் பல இடங்களில் தேடியும், கிடைக்காததால் இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீயணைப்புத் துறையினா், உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.