ராஜபாளையம் ந.அ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் 108 திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவேகானந்த கேந்திரத்தின் சாா்பில் உலக நன்மை வேண்டியும், கல்வியில் சிறக்க வேண்டியும் நடைபெற்ற விளக்குப் பூஜைக்கு கேந்திரத் தலைவா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். என்.ஏ. ராமச்சந்திர ராஜா, குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா ஆகியோா் விளக்கேற்றித் தொடக்கி வைத்தனா். விருதுநகா் மாவட்டப் பொறுப்பாளா் பேச்சியப்பன் விளக்குப் பூஜையை நடத்தினாா்.
விளக்கு பூஜையில் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, தொழில்நுட்பக் கல்லூரி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு துவக்கப்பள்ளி மற்றும் என்.ஏ.இராமச்சந்திரராஜா குருகுலம் ஆகியவற்றின் ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னதாக கேந்திர செயலாளா் மாரியப்பன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அகஸ்டின் ஜோதிமணி நன்றி கூறினாா்.