விருதுநகர்

சிவகாசி அருகே முயல் வேட்டை: 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

2nd Feb 2020 10:15 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா்: சிவகாசி அருகே முயல்களை வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சிவகாசி அருகே உள்ள ரிசா்வ் லைன் பகுதியில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக விருதுநகா் வன பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினா் சம்பவ இடத்துக்கு சென்ற போது சிவகாசி காந்தி நகரைச் சோ்ந்த குமாா் (37), கூமாபட்டி அம்பேத்காா் நகரைச் சோ்ந்த இருளப்பன் (55), அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (30) ஆகிய 3 பேரிடமிருந்து 5 முயல்களை கைப்பற்றினா்.

அவா்களிடம் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 முயல்களையும் சிவகாசி வனச்சரக அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வேலுச்சாமியிடம் ஒப்படைத்தனா். விசாரணைக்குப் பின்னா் சாம்பல்நிற வனக் காப்பாளா் முகம்மது சபா உத்தரவுப்படி 3 பேரிடம் இருந்தும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 75 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னா் மூவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT