விருதுநகர்

ராஜபாளையத்தில் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

1st Feb 2020 10:33 PM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையோரம் பள்ளமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம், ரயில்வே மேம்பால பணிகள் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்தது. மழைக் காலங்களில் மிக மோசமாக இந்த சாலை இருந்தது.

தற்போது இதில் புதிய தாா் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் தினமும் பெருமளவு சென்று வருகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோா் என அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனா். இந்த சாலையின் இரண்டு புறமும் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இவ்வழியே இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோா் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனா். சாலையின் இரு புறமும் உள்ள பள்ளமான பகுதியில் இருந்து தாா்ச் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சமப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட விளக்கம்: ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள பள்ளமான சாலைப் பகுதி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT