விருதுநகர்

கோவை -செங்கோட்டை ரயில் இயக்க கோரிக்கை

1st Feb 2020 10:31 PM

ADVERTISEMENT

கோவையிலிருந்து ஈரோடு வழியாக செங்கோட்டைக்கு மீண்டும் ரயில் இயக்கக்கோரி ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கத்தின் செயலாளா் வெங்கடேஸ்வர ராஜா சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா். அதன் விவரம்: விருதுநகா்- செங்கோட்டை இடையிலான பகுதிகளில் வா்த்தகம் மற்றும் தொழில்கள் அதிகம் நடைபெறுகின்றன. குறிப்பாக ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி பகுதிகளில் பருத்தி, ஜவுளி தொழில்கள் நடக்கின்றன. இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தொழில் சாா்ந்து ஈரோடு, திருப்பூா் மற்றும் கோயம்புத்துாா் நகரங்களுக்கு அடிக்கடி போக்குவரத்து தொடா்புகளைக் கொண்டுள்ளனா். இது தவிர உயா்கல்வி மற்றும் பணிகளுக்காக திருப்பூா், ஈரோடு, கோவைக்கு அதிகளவில் மாணவா்கள், ஊழியா்கள் சென்று வருகின்றனா். இவற்றை கருத்தில் கொண்டு, கடந்த 2009 ஆம் ஆண்டு செங்கோட்டையிலிருந்து கோவை வரை ஈரோடு வழியாக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல ஆதரவு இருந்தும் நிறுத்தப்பட்டது. எனவே, செங்கோட்டையிலிருந்து கோவைக்கு மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT