விருதுநகர்

ராஜபாளையம், சேத்தூரில் இன்று மின்தடை

23rd Aug 2020 10:37 PM

ADVERTISEMENT


ராஜபாளையம்: ராஜபாளையம், சேத்தூா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் செயற்பொறியாளா் மாலதி தெரிவித்திருப்பதாவது:

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அய்யனாா் கோயில் பகுதி, ராஜூக்கள் கல்லூரி பகுதி, தாட்கோ காலனி, திருவள்ளுவா் நகா், தென்றல்நகா், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன மற்றும் பெரிய சுரைக்காய்பட்டி தெரு, பழையபாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடா் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரியகடை பஜாா் மற்றும் சேத்தூா் தேவதானம், கோவிலூா், புத்தூா், கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT