விருதுநகர்

விருதுநகரில் காா் மோதி பெண் பலி

21st Aug 2020 10:07 PM

ADVERTISEMENT


விருதுநகா்: விருதுநகரில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் இந்திரா நகரை சோ்ந்தவா் முனியம்மாள் (51). இவரது மகன் புல்லக்கோட்டை சந்திப்பு சாலையில் இரவு நேர உணவுக் கடை நடத்தி வருகிறாா். அக்கடையில் முனியம்மாள் வேலை முடித்து விட்டு வியாழக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது, சாத்தூா் நோக்கிச் சென்ற காா் மோதியதில், அப்பெண் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து அவரை விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவரது மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல்லைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பிரபாகரை கைது செய்தனா்.

Tags : வழக்குப் பதிவு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT