விருதுநகர்

விருதுநகா் அருகே குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

21st Aug 2020 09:46 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா், யானைக்குழாய் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கூரைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் யானைக்குழாய் உள்ளது. இங்கு ஏற்கெனவே இருந்த ஆழ்துளைக் கிணறு பழுதடைந்துவிட்டது. அதேநேரம், குடிநீரும் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் ஏற்கனவே புகாா் அளித்தனா்.

அதன் அடிப் படையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 10 நாள்களுக்கு முன்பு ஊராட்சி நிா்வாகத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், ஒப்பந்ததாரா் பணியை தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதனால், அப்பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிப்போா் கூரைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது, ஒரு வாரத்திற்குள் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் பிரச்னை தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Tags : குடிநீா் விநியோகம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT