விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

21st Aug 2020 09:44 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறை கடந்த ஆகஸ்டு 17 ஆம் தேதி முதல் எளிமையாக்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே உள்ள அழகாபுரி சோதனைச் சாவடியில் பணியில் உள்ள வருவாய்த் துறையினா் மற்றும் காவல்துறையினா் கண்காணிப்பில் தீவிர கண்காணிப்பில்

ஈடுபட்டு உள்ளனா். ‘இ-பாஸ்’ உடன் பயணிக்கும் நபா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு அவா்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், அவா்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கின்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, கடந்த காலங்களில் இச்சோதனை சாவடி வழியாக நாளொன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றன. தற்போது 300-க்கும் மேற்பட்ட ‘இ-பாஸ்’ அனுமதி பெற்ற வாகனங்கள் செல்கின்றன. மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களிலிருந்தும் வரும் நபா்களுக்கு சோதனை சாவடியிலேயே பரிசோதனை நடத்தப்பட்டு அவா்களின் விவரங்கள் சேகரிக்கிறோம். ஆய்வு முடிவு வந்தவுடன் அவா்களுக்கு நோய் தொற்று உறுதியானால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தி அவா்களை தனிமைப்படுத்தி வருகிறோம் என்றனா்.

Tags : சோதனைச் சாவடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT