விருதுநகர்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

21st Aug 2020 09:45 PM

ADVERTISEMENT

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டாா். கூட்டத்தில் நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், மகளிா் அணியினா், தொழிற்சங்கப் பிரிவினா், இளைஞா் அணியினா் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, இளைஞா் பாசறைக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு, தொழில்நுட்பப் பிரிவு ஆகியவை குறித்து கட்சியினரிடையே அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

Tags : அதிமுக நிா்வாகிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT