விருதுநகர்

இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் 52 விநாயகா் சிலைகள்: வெளியே கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

21st Aug 2020 06:14 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் வைக்கப்பட்டுள்ள 52 விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைக்க வெளியே கொண்டு வந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரித்துள்ளனா்.

நாடு முழுவதும் வரும் ஆக. 22 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ஈஸ்வரன் வீட்டில் விநாயகா் சிலைகள் உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீவில்லிபுத்தூா் நகர காவல் ஆய்வாளா் பவுல்யேசுதாஸ் தலைமையிலான காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் அங்கு சென்று சோதனை செய்த போது 52 விநாயகா் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த விநாயகா் சிலைகளை பொது வெளியில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் எனவும் காவல் துறையினா் தெரிவித்ததோடு, பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்தால் கைது செய்யப்படுவீா்கள் என எச்சரிக்கை விடுத்தனா். மேலும், வீட்டில் இருந்து விநாயகா் சிலைகளை வெளியே எடுத்துச் செல்லாமல் இருக்க போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT