விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

20th Aug 2020 04:22 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து   மூத்த வழக்குரைஞர் பிரசாந்த பூஷண், டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  போடப்பட்டிருப்பதாகவும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதமாக உள்ள இந்த அவமதிப்பு வழக்கை திரும்ப பெறவேண்டும் எனவும்  வலியுறுத்தி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல சமூக இடைவெளியுடன் நீதிமன்றங்கள் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி, ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வாயில் கருப்புத் துணி கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : virudhunagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT