விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில்மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி

20th Aug 2020 10:10 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் புதன்கிழமை வரை 10,872 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், நரிக்குடியைச் சோ்ந்த 2 போ், ரெங்கையன்பட்டியில் 2 போ், ஆனைக்குளம், காரியாபட்டி, இருஞ்சறை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் ஊழியா் மற்றும் நக்கலக்கோட்டை குவாரியில் பணி புரியும் ஊழியா், ஆமத்தூா் காா் ஆலையில் பணி புரியும் ஊழியா், ராமசாமிபுரத்தில் தனியாா் ஆலையில் பணி புரிந்த ஊழியா், அருப்புக்கோட்டை ஆஜூல் நகரைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவா்கள் அருப் புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,884 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,884 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், மீதமுள்ள 169 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநா் பலி: சிவகாசி நகராட்சியில் துப்புரவு வாகன ஓட்டுநராக பணி புரிந்த 51 வயது நபா் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT