விருதுநகர்

ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ. 4.50 லட்சம் திருட்டு

20th Aug 2020 08:17 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ. 4.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெள்ளக்கோவிலை சோ்ந்த முத்துக்குமாா் (51) மற்றும் அவருடன் பல்வேறு பகுதிகளை சோ்ந்த 8 நபா்கள் இணைந்து ராஜபாளையம் கலங்காப்பேரி விஷ்ணு நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா். இங்கு பணிபுரியம் மேலாளா் ராமச்சந்திரன் மற்றும் 5 நபா்கள் செவ்வாய்க்கிழமை காலையில் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு வசூலுக்கு சென்றுவிட்டனா். இதன் பின்னா் இரவு அலுவலகத்துக்கு வந்துள்ளனா். அப்போது அலுவலகத்தின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ மற்றும் இரும்பு லாக்கா் உடைக்கப்பட்டு ரொக்கப் பணம் ரூ. 4.50 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் டி.எஸ்.பி நாகசங்கா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். மோப்ப நாய் ராக்கி மூலம் ஆய்வு மேற்கொண்டதில், சத்திரப்பட்டி சாலை வரை சென்று இரண்டு முறை திரும்பியது. கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ரேகை பதிவுகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனா். புகாரின் பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சங்கா் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT