விருதுநகர்

சாத்தூா் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து

20th Aug 2020 08:18 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே புதன்கிழமை பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா்- கோவில்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியை சோ்ந்த வெற்றிவேல் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் புதன்கிழமை இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூா் மற்றும் கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சாத்தூா் தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வெடி விபத்து மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT