தொடா் மழையின்மை மற்றும் அதிக வெயில் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் வடு மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் மையப் பகுதியில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் உள்ளது. இதன் அருகிலேயே பெரியகுளம் கண்மாய் உள்ளது. இதேபோல், மடவாா் வளாகம் பகுதியில் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய மற்றும் பழைய குளங்கள் உள்ளன.
இந்த குளங்கள், கண்மாய்களில் தண்ணீா் இருந்தால் நகா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் அதிகமாக இருக்கும். தண்ணீரின்றி வற்றினால், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். தற்போது மழை பெய்யாததுடன், அதிக வெயிலும் நிலவுவதால், திருமுக்குளம், பெரியகுளம் கணமாய் மற்றும் குளங்கள் தண்ணீரின்றி வற்றியுள்ளன. இதனால், குளம், கண்மாய்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் இடங்களாக மாறியுள்ளன.