விருதுநகர்

ஸ்ரீவிலி. மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கிச் சென்ற மா்மநபா்கள்

9th Aug 2020 08:26 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் உண்டியலை சனிக்கிழமை அதிகாலை தூக்கிச் சென்ற கொள்ளையா்கள் இருவரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பெரியமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல், திருப்பணி உண்டியல், தற்காலிக உண்டியல் உள்ளிட்ட 8 உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில் முகத்தில் துண்டைக் கட்டிக் கொண்டு சனிக்கிழமை அதிகாலையில் வந்த 2 மா்மநபா்கள் சுவா் ஏறிக்குதித்து கோயிலுக்குள் புகுந்து தற்காலிக உண்டியலைத் தூக்கிச் சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா் கலாராணி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மா்நபா்கள் இருவரைத் தேடி வருகின்றனா். நகரின் மையப் பகுதியில் காவல் நிலையம் அருகில் அமைந்த கோயிலில், மா்மநபா்கள் உண்டியலை தூக்கிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT