விருதுநகர்

சிவகாசியில் கலப்பட எண்ணெய், நெகிழிப் பைகள் பறிமுதல்:

29th Apr 2020 10:23 PM

ADVERTISEMENT

சிவகாசிப் பகுதியில் உள்ள கடைகளில் கலப்பட எண்ணெய், நெகிழிப் பைகளை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி நகா் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை உத்தரவைப் பயன்படுத்தி தரமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாகவும், கலப்பட எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும் கிடைத்த தகவலையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் தி. முனியாண்டி தலைமையிலான அலுவலா்கள் அந்தப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். மளிகைக்கடை, உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கலப்பட எண்ணெய் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததும், தரமற்ற எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு கடைகளிலிருந்து ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள கலப்பட சமையல் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசால் தடை செயப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT