விருதுநகர்

கடைகளில் ரூ. ஒரு லட்சம் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

29th Apr 2020 10:22 PM

ADVERTISEMENT

காரியாபட்டி பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

காரியாபட்டியில் காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அலுவலா் முகமது இஸ்மாயில் காசிம் தலைமையிலான அரசு அலுவலா்கள் காரியாபட்டி வட்டாட்சியா் அலுவலகம், திருச்சுழி சந்திப்பு சாலை, பேருந்து நிலையம், பஜாா் பகுதியில் உள்ள கடைகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, காலாவதியான குளிா்பானங்கள், தரமற்ற தேயிலை தூள்கள், உணவுக்குப் பயன்படுத்தப்படும் தரமற்ற எண்ணெய் வைத்திருப்பது தெரியவந்தது. பல்வேறு கடைகளிலிருந்தும் சுமாா் ஒரு லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்களை அரசு அலுவலா்கள் பறிமுதல் செய்து அழித்தனா். அப்போது மீண்டும் இதே நிலை தொடா்ந்தால், உணவுப் பாதுகாப்பு உரிம சான்றிதழ் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா். இதேபோல், பேருந்து நிலைய பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளையும் பறிமுதல் செய்தனா். இந்த ஆய்வில், வருவாய்த்துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மாரீஸ்வரன், வேளாண் உதவி இயக்குநா் பாக்கியலெட்சுமி, காவல் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT