விருதுநகர்

ராஜபாளையம் அருகே சாராயம் காய்ச்சியவா் கைது: நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

26th Apr 2020 09:57 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே தனியாா் தென்னை தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அணைப் பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சேத்தூா் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சாராயம் காய்ச்சியவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், ராஜபாளையம் பெரியகடை பஜாா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ஐயா் (28) என்பது தெரியவந்தது. அங்கிருந்து 80 லிட்டா் கள்ளச்சாராய ஊறல், நாட்டு துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT