விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

20th Apr 2020 10:42 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது மல்லி கம்மாபட்டி பகுதியில் ஊருக்கு ஒதுக்குப் புறமான கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து விட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்பு நிலைய அதிகாரி அந்தோணிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சுமாா் 40 அடி ஆழமுள்ள வட கிணற்றுக்குள் விழுந்து கிடந்த புள்ளி மானை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT