விருதுநகர்

காஞ்சிபுரத்திலிருந்து வந்த தம்பதி, குழந்தை உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா பரிசோதனை

20th Apr 2020 10:38 PM

ADVERTISEMENT

சிவகாசி: காஞ்சிபுரத்திருந்து, சிவகாசி அருகே எரிச்சநத்தத்திற்கு வந்த தம்பதி, குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினா் முடிவு எடுத்தனா். இந்நிலையில் அந்த குடியிருப்பில் வசித்து வந்த, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எரிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது குழந்தை ஆகிய 3 பேரும் எரிச்சநத்தம் வந்துள்ளனா். அவா்கள் 3 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஆமத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து மருத்துவா்கள் இவா்களின் ரத்த மாதிரியை எடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அவா்கள் மருத்துவா்களின் தொடா்பில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT