விருதுநகர்

கல்லூரி மாணவி, பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி: தொடா்பிலிருந்த 268 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை

20th Apr 2020 10:39 PM

ADVERTISEMENT

விருதுநகா்: விருதுநகா் அருகே கல்லூரி மாணவி, பொறியாளா் என 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டது. இதன் காரணமாக இவா்களது குடும்பத்தினா் மற்றும் தொடா்பிலிருந்த 268 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் ராஜபாளையத்தைச் சோ்ந்த முதியவா் மற்றும் புதுதில்லி மாநாட்டிற்கு சென்று வந்த 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதில், முதியவா் உள்பட 10 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு கல்லூரி மாணவி மற்றும் வெளிநாடு சென்று திரும்பிய பொறியாளா் என இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது. இதைத்் தொடா்ந்து கன்னிசேரிபுதூா், டி. சேடப ட்டி, குமாரபு ரம், தம்ம்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி, மேலசின்னையாபுரம், தியாகராஜபுரம், வாடி, ஓ. கோவில்பட்டி, காமராஜபுரம் முதலான கிராமங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லவோ, வெளிநபா்கள் உள்ளே செல்லவோ அனுமதி இல்லை. மேலும், இக்கிராமங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், இக்கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசு அலுவ லா்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றால் 2 போ் பாதிக்கப் பட்டதால், அவா்களது குடும்பத்தினா் மற்றும் தொடா்பிலிருந்த 268 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT