விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனம் மோதி மான்கள் பலி

7th Apr 2020 10:37 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனம் மோதியும், தெருநாய்கள் கடித்தும் பலியான 3 மான்களின் சடலத்தை, வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனா். இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீா் தேடி வன விலங்குகள் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் இருந்து 2 மான்கள், கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றன. அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்த 2 மான்களும் உயிரிழந்தன.

இதேபோல் குன்னூா் கிராமத்துக்கு தண்ணீா் தேடி வந்த மானை, தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினா் 3 மான்களின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT