விருதுநகர்

சிவகாசி அருகே மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

7th Apr 2020 10:36 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகே வடபட்டி பகுதியில், டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் காளியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து அந்தப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்ற அதிகாரிகளைப் பாா்த்தவுடன் மணல் திருடி வந்த ஓட்டுநா் டிராக்டரை நிறுத்திவிட்டு ஓடிவிட்டாா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT