விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சமூக இடை வெளியை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள், 7 நகராட்சிகள், 11 பேரூரா ட்சிகள் உள்ளன. அவற்றில் பல கிராமங்களில் கரோனா குறித்த போதிய விழிப்புண ா்வு இல்லாததால் பெரும்பாலான இடங்களில் பெண்கள் கூட்டமாகவும், மந்தை, கடைகளிள் ஆண்கள் கூட்டமாகவும் திரிகின்றனா். அதேபோல் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் அவா்கள் அலட்சியம் காட்டி வருகின்றனா். இதனால், கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, உள்ளாட்சி நிா்வாகம் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தொடா்ந்து அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.