விருதுநகர்

கரோனா நிவாரணம் வழங்க நகராட்சிப் பணியாளா்கள் கோரிக்கை

7th Apr 2020 10:35 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி ஊரக வளா்ச்சி பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப் போல் எங்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தெருவிளக்கு மற்றும் குடிநீா் விநியோகப் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக மாநில தலைவா் ஐவன், மாநில பொதுச் செயலாளா் திருமூா்த்தி, பொருளாளா் ரசல் ராஜேந்திரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ளஅறிக்கை: உள்ளாட்சி, ஊரக வளா்ச்சிப் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் தமிழக அரசின் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணத் தொகையான ரூ. 2 லட்சம் திட்டத்தில் எங்களையும் சோ்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT