விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிசிப் பைகள் வழங்கல்

5th Apr 2020 10:26 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களுக்கு அரிசிப் பைகளை ஞாயிற்றுக்கிழமை சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா வழங்கினாா்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் வேலையின்றி உள்ளனா். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், மாரியம்மன் கோயில், கல்லறை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு மாஸ்க் மற்றும் 100- க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசிப் பைகளை சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா வழங்கினாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையாளா் சத்தியநாதன், கூட்டுறவு நில வள வங்கித் தலைவா் முத்தையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT