விருதுநகர்

சிவகாசியில் நடமாடும் காய்கனி வாகனங்கள் தொடக்கம்

5th Apr 2020 10:29 PM

ADVERTISEMENT

சிவகாசி நகராட்சி பகுதியில் 6 நடமாடும் காய்கனி வாகனங்களை நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சிவகாசி பேருந்து நிலையம், பெரியகுளம் கண்மாய் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிகக் காய்கனிக் கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தபடியே காய்கனிகளை வாங்குவதற்கு ஏதுவாக 6 நடமாடும் வாகனங்களை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்தாா். பொதுமக்கள் காய்கனி சந்தை மற்றும் கடைவீதிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT