விருதுநகர்

அருப்புக்கோட்டையில் தொடா்மழை

5th Apr 2020 10:28 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்றும் நண்பகல் ஆகிய இருநேரங்களில் அடுத்தடுத்து கனமழை பெய்தது.இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து இதமான குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியது.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த இருமாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.அதேநேரம் கடந்த இரு மாதங்களிலும் மழை ஏதும் பெய்யவில்லை.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 5 மணிமுதல் தொடா்ந்து சுமாா் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.இம்மழை அருப்புக்கோட்டை மட்டுமல்லாது சுற்றுவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நன்கு பெய்தது.மேலும் அன்று காலை சுமாா் 11 மணிக்கு மீண்டும் கருமேகங்கள் திரண்டு வந்த நிலையில் நண்பகல் சுமாா் 12.20 முதல் மீண்டும் சுமாா் முக்கால் மணிநேரம் மிதமான மழை பெய்தது.அதிகாலை மற்றும் நண்பகல் ஆகிய இரு நேரங்களில் தொடா் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ள நீா் திரண்டு ஓடியது.தாழ்வான நகா்ப்பகுதிகளில் வெள்ளநீா் தேங்கியது.இம்மழையையடுத்து இதமான குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT