விருதுநகர்

நியாய விலைக் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்கள்

1st Apr 2020 10:14 PM

ADVERTISEMENT

சிவகாசி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் புதன்கிழமை பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குடும்ப அட்டை தாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை நாளை முதல் தமிழக அரசு வழங்க உள்ளது. சிவகாசிப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் இதற்கான டோக்கன் புதன்கிழமை வழங்கப்பட்டது. மருதுபாண்டியா் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினா். அவா்களில் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததை அறிந்த போலீஸாா் அங்கு சென்றனா். ஒவ்வொருவரும் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் யாரும் அதைக் கேட்காமல் கூட்டமாக நின்றிருந்தனா். இதனால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதேபோல் சிவகாசியில் உள்ள எந்த நியாய விலைக் கடைகளிலும் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT