விருதுநகர்

காய்கனி சந்தையில் சமூக இடைவெளி: எம்.எல்.ஏ ஆய்வு

1st Apr 2020 10:10 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் இயங்கும் காய்கனி சந்தையில் சமூக இடைவெளி முறை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என சாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜவா்மன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தை மற்றும் கடைவீதிகளில் சிலா் அதனைக் கடைப்பிடிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் பகுதிகளில் ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், தொடா்ந்து சத்திரப்பட்டி, அய்யனாபுரம், மேலராஜகுலராமன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை தொடக்கி வைத்தாா். இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மருந்தை தனியாா் தொண்டு அமைப்பின் தலைவா் ராமராஜ் ஊராட்சிக்கு இலவசமாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலா் வேல்முருகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கந்த கிருஷ்ணகுமாா், மாடசாமி, ஒன்றிய பொருளாளா் சுப்பையா துரை, ஒன்றிய அம்மா பேரவை தலைவா் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளா் முருகபூபதி, ஒன்றிய அவைத் தலைவா் முருகானந்தம் மற்றும் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT