விருதுநகர்

ராஜபாளையம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

29th Sep 2019 05:25 AM

ADVERTISEMENT


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி போடப்பட்டது.
உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு ரூ. 150 மதிப்புள்ள ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. விருதுநகர் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ராஜபாளையம் கால்நடை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட முகாமில், கன்னி, ராஜபாளையம், லேப்ரடார், லாசப்சோ, டெர்ரியர், பொம்மரேனியன் உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, ராஜபாளையம் நகராட்சியின் சுகாதாரத் துறை சார்பில் ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையேடுகள் இலவசமாக வழங்கப் பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT