சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் 24 அரங்குகளை அமைத்திருந்தனர். கல்லூரி முதல்வர் த.பழனீஸ்வரி தலைமையில், தாளாளர் அருணாஅசோக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
இதில் பெண்களுக்கான கைப்பைகள், குளியல் பொடிகள், பொம்மைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஜாம், சர்பத் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.