விருதுநகர்

விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் நிலையத்துக்கு  தீபாவளி விற்பனை இலக்கு ரூ.70 லட்சம்

17th Sep 2019 07:14 AM

ADVERTISEMENT

விருதுநகர் தெப்பம் பஜார் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மண்டல மேலாளர் நாகராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
       தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ்  கடந்த 84 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, பண்டிகைக் காலங்களில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியை தமிழக அரசு வழங்கி வருகிறது. 
     அதன்படி, தீபாவளி பண்டிக்கைக்கும் இந்த சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, பல வண்ணங்களில் பல்வேறு வடிவமைப்புகளில் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை என ஏராளமான வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பருத்தியாலான ஆர்கானிக் புடவை ரகங்கள் மற்றும் பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் வகையில், செட்டிநாடு சேலைகள், சுங்கிடி சேலைகள், ஆண்களுக்கான சட்டைகளும் உள்ளன.
     விருதுநகர் தெப்பம் பஜார் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், கடந்தாண்டு தீபாவளிக்கு ரூ.45.53 லட்சம் விற்பனை நடைபெற்றது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனையாக ரூ. 70 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
     முன்னதாக, தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதில், மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர் குணசேகரன் (அரசு திட்டம்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT