விருதுநகர்

போக்சோ சட்டத்தில் மாணவர் கைது

10th Sep 2019 08:19 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் போக்சோ சட்டத்தில் பிளஸ் 1 பள்ளி மாணவரைத் திங்கள்கிழமை கைது செய்து அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  திருச்சுழி வட்டம் சித்தலக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவிக்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டதாம். இதில் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியதால் அம்மாணவி கர்ப்பமடைந்தார். இதையறிந்த அந்த மாணவியின் பெற்றோர், மாணவரை திருமணம் செய்து கொள்ள கூறினராம். ஆனால் மாணவர், அம்மாணவியை திருமணம் செய்துகொள்ள மறுக்கவே, இவ்விவகாரம் தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்ட மகளிர் காவல் ஆய்வாளர் தென்றல், மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT