விருதுநகர்

விருதுநகர் அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதியதில் ஆலை மேற்பார்வையாளர் பலி

7th Sep 2019 02:27 AM

ADVERTISEMENT

விருதுநகர் அருகே குமாரலிங்காபுரத்தில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் சுற்றுலாப் பேருந்து மோதியதில், தனியார் ஆலை மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
       விருதுநகர், ஆமத்தூர் அருகே சிதம்பராபுரத்தைச் சேர்நத கணேசன் மகன் ராஜீவ்காந்தி (32). இவர், விருதுநகரில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, அழகுலெட்சுமி (27) என்ற மனைவி உள்ளார்.      இந்நிலையில், ராஜீவ்காந்தி வியாழக்கிழமை இரவு தனது ஊரிலிருந்து விருதுநகர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அதேநேரத்தில், மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலு (60) என்பவர் கோவையிலிருந்து சிவகாசி நோக்கி தனியார் சுற்றுலாப் பேருந்தை ஓட்டிவந் துள்ளார்.
      அப்போது, விருதுநகர் அருகே உள்ள குமாரலிங்காபுரம் கிராமப் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில், ராஜீவ்காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ராஜீவ் காந்தியின் சடலத்தைக் கைப்பற்றி விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.       இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT