விருதுநகர்

விருதுநகரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:34 AM

ADVERTISEMENT

தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
        விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன் தலைமை வகித்தார்.
      ஆர்ப்பாட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினை மத்திய அரசு கைவிட வேண்டும்.     தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்யவேண்டும். வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காலதாமதமின்றி நிவாரணம் வழங்கவேண்டும்.       எம்.எஸ். சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.       இதில், சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT