விருதுநகர்

ராஜபாளையம் அருகே எரிந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு

7th Sep 2019 02:26 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே எரிந்த நிலையில் முதியவர் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. 
ராஜபாளையம் அருகே அலப்பசேரி கண்மாய் பகுதியில் எரிந்த நிலையில் முதியவர் சடலம் கிடப்பதாக, தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில், சார்பு-ஆய்வாளர் காளிராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 
அதில், இறந்தது மங்காபுரம் தெருவைச் சேர்ந்த ராமர் (86) என்பது தெரிய வந்தது.
விசாரணையில், இறந்த ராமரின் மகன் சின்னசாமி (58). கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த இவர்கள், செங்கல் சூளை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், ராமர் தனக்கு அனைவரும் 
கீழ்படிந்து நடக்கவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் எற்பட்டுள்ளது. 
இதையடுத்து மனவேதனை அடைந்த முதியவர் ராமர், அலப்பசேரி கண்மாய்க்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் சென்று, அங்கு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாராம்.
இது குறித்து சின்னசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT