விருதுநகர்

மது அருந்திவிட்டு பைக் ஓட்டிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

7th Sep 2019 02:28 AM

ADVERTISEMENT

சிவகாசியில் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞருக்கு, நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
       நீதிமன்ற உத்தரவின்பேரில், தமிழக அரசு இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், விதியை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை பன்மடங்காக உயர்த்தியுள்ளது.
      அதனடிப்படையில், வியாழக்கிழமை சிவகாசி போக்குவரத்து காவல் சார்பு- ஆய்வாளர் மாரீஸ்வரன் மற்றும் போலீஸார், புதுரோட்டு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது.       விசாரணையில், அவர் சுக்கிரவார்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் அர்ஜூன் (24) என்பதும், அவர் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் வேலைபார்த்து வருவதும் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர் மது அருந்தியதை உறுதி செய்து சான்று பெற்றனர்.
      தொடந்து, வெள்ளிக்கிழமை அவரை  சிவகாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 இல் ஆஜர்படுத்தினர். நீதிபதி கல்யாணமாரிமுத்து, மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனம் ஓட்டியதாக, அர்ஜூனுக்கு ரூ. 10 ஆயிரம்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT