விருதுநகர்

போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் மின்கம்பம்

7th Sep 2019 02:25 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் முறிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. 
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமுதலிங்கேஸ்பரர் கோயில் நோக்கிச் செல்லும் பிரதான சாலையில் நாடார் மேலரத வீதியில் பல ஆண்டுகளுக்கு முன் மின்கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த மின்கம்பம் மற்ற 2 மின்கம்பங்களின் துணையுடன் நிற்கிறது. இந்நிலையில், அதிக காற்று வீசினாலோ, பலத்த மழை பெய்தாலோ இந்த மின்கம்பம் எந்நேரமும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன், இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT