விருதுநகர்

பந்தல்குடி, நரிக்குடியில்  இன்று மின்தடை

7th Sep 2019 02:34 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில் பந்தல்குடி மற்றும் நரிக்குடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
     எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, பந்தல்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், பந்தல்குடி, சுக்கிலநத்தம், ஆமணக்கு நத்தம், வெள்ளையாபுரம், குருந்தமடம், வதுவார்பட்டி, சேதுராஜபுரம், செட்டிக்குறிச்சி, மீனாட்சிபுரம், ஏ.கல்லுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
     இதேபோல், நரிக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நரிக்குடி, உலக்குடி, இருஞ்சிறை, கட்டனூர், நாலூர், உளுத்திமடை சாலை, இலுப்பைக்குளம், பனைக்குடி, இணக்கனேரி, மறைக்குளம், குறவைக்குளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளர் பி. முத்தரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT